Home Tamil World

Tamil World

ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றால் என்ன ?

ஹரே கிருஷ்ணா இயக்கம் சைதன்ய மகாப்ரபுவால் (கிருஷ்ணரின் அவதாரம்) 500 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.  மனித குல மேன்மைக்காகவும்,  தன்னுணர்வு விஞ்ஞானத்தில் மக்களை பயிற்றுவிபதர்காகவும் உலகளாவிய அளவில் 1966ல் தெய்வத்திரு அ.ச .பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா  இந்த இயக்கம் தோற்று விக்கப்பட்டது.  இன்று உலகம் முழுவதும் இந்த இயக்கம் தனது சேவைகளை செய்து வருகிறது.  உயர்ந்த வழிபாட்டு தரம்,  நவீன முறையில் ஆன்மிக கல்வி , ஜப தியான பயிற்சி, மாணவர்களுக்கான  யோகா பயிற்சி  முகாம்,  அளவற்ற பிரசாத அன்னதானம் மற்றும் ஜாதி, மத, இன , நல்லிணக்க பயிற்சி வகுப்புகள் ஆகியவை  ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகும்.

  

ஸ்ரீல பிரபுபாதா யார் ?

 தெய்வத்திரு அ.ச .பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் நமது பாரத தேசத்தின் கொல்கத்தாவில் 1896ல் பிறந்தவர். காவியுடை காற்றில் படபடக்க , இடை இடையே ஹார்ட் அட்டக்குடன்  சரக்கு கப்பலில் சுமார் 35 நாட்கள், பயணத்திற்கு பின், 1965ல் நியூ யார்க்கில் தனது காலடிகளை எடுத்து வைத்தார். 12  வருடத்திற்கு பின் அவர் இவ்வுலகை விட்டு செல்லும் போது  ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் சுமார் நூற்றுக்கும் மேலான இஸ்கான் கோவில்களையும், பல்லாயிர கணக்கான பக்தர்களையும் உருவாக்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். குறிப்பாக மதி மயங்கி , வாழ்வில்  போதை மற்றும் தவறான பழக்க வழக்கங்களினால் சீரழிந்து கொண்டிருந்த பள்ளயிரகனகானோர் , இனர் உரை எழுதிய  'பகவத் கீதை உண்மைஉருவில்' நூலை படித்து மனம் திருந்தி அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இன்று பல நாடுகளில் உள்ள பல்களைக்கழகங்களில் இவரது நூல்கள் பலவற்றை பாட நூலக வைத்துள்ளனர்.

பேரன் பேத்திகளுடன் விளையாடி ஈசி சேரில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் வயதில் இவைற்றையெல்லாம் எப்படி செய்ய  முடிந்தது??  ஓரிரு வார்த்தைகளால் இதற்கு பதிலை சொல்லிவிட முடியாது.  இதற்கான பதிலை  அறிய அவரின் வாழ்க்கை சரித்திரத்தை தான் புரட்ட வேண்டும் .  அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் எங்கள் கோவிலில் கிடைக்கும்.

 

ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம்

 

                     

 

மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள்.  ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம்.  அனால் மஹா மந்திரம் என்பது எல்லாவித துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும்.  மன சோர்வு , மன அழுத்தம் , பாவ விளைவுகள் , தீய சிந்தனைகள் , காம , க்ரோத , மோக மற்றும் அணைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்து மனதை விடுவிக்கும் சக்தி "ஹரே கிருஷ்ணா " மந்திரத்திற்கு இருபதால் இதை மஹா மந்திரம் என்று வேதங்கள் அழைகின்றன.  ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை சொல்ல கட்டுபாடுகள் ஏதும் இல்லை.  உச்சரிக்கும் முறை :   நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை  உச்சரித்து வந்தால் மன அமைதியையும் , சந்தோசத்தையும் பெறலாம்.

 

நான் எப்படி கலந்துகொள்வது ?

 ஹரே கிருஷ்ணா கோவில் பல்வேறு நிகழ்சிகளை நடத்திவருகின்றது . காலை 4:30 மணி மங்கள ஆரத்தி முதல் துவங்கி , மேலும் பல ஆரத்திகள் , சொற்பொழிவுகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு நிகழ்சிகள் உண்டு, அன்று அனைவருக்கும் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பல சொற்பொழிவுகளும், சிறு சிறு வகுப்புகளும் உண்டு.  மேலும் விவரங்களுக்கு கோவிலை தொடர்பு கொள்ளவும்.